டில்லி,

ந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கி களில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு கூட தேவையான பணத்தை எடுக்க முடியாத சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யும் தனது வங்கியில் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கு திடீரென கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் வங்கிகள் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை கடுமையாக உயர்த்திவிட்ட நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியும் புதிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொகையாக பெருநகரங்களில் 5 ஆயிரம் ரூபாய், இதர நகரங்களில் 3 ஆயிரம் ரூபாய், சிறிய நகரங்களில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப்புறங் களில் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அதிக பட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் வங்கிக்கிளைகளில் பணபரிவர்த்தனை செய்தால், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

இது சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.