சென்னை,

திமுக செயல்தலைவர் பிறந்தநாளின்போது, மீண்டும் திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

‘மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை ராதாரவி நிறுத்த வேண்டும்”   என அவர் தனது பேஸ்புக் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.வில் இணைந்த நடிகர் ராதாரவி. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது மாற்று கட்சி தலைர்களான  வைகோ மற்றும் ராமதாசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசினார்.

அவரது பேச்சை கட்சி நிர்வாகிகள் பெரிதும் ரசித்தனர். ஆனால், அவரது பேச்சுக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு வெளியானது.

மாற்றுத் திறனாளிக் குழந்தைகளைப் புண்படுத்தும் வகையில் பேசுவதா என பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக எம்.பி.யான கனிமொழி  தமது முகநூல் பக்கத்தில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளளார்.

அதில், ‘மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகவும், ஏளனமாகவும் ராதாரவி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’  எனக்குறிப்பிட்டுள்ளார். உடல்கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான் என்றும், மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை என்று கூறியுள்ள கனிமொழி? மாற்றுத் திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கண்டனம் திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.