லக்னோ,

உ.பி.யில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

403 சட்டமன்றத் தொகுதிகள் உடைய உ.பி. சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக  தேர்தல் நடைபெற்று வருகிறது.. இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இன்று  49 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாககுப்பதிவு தொடங்குகிறது.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் , சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்ற அஜாம்கர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட் சட்டமன்றத் தொகுதிகளும் அடக்கம்.

6வது கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 49 தொகுதிகளில் 94.60 லட்சம் ஆண் வாக்காளர்களையும், 74.84 லட்சம் பெண் வாக்காளர்களையும் சேர்த்து மொத்தம் 1.72 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 7,926 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தங்களது வாக்குகளை செலுத்த பொதுமக்கள் காலையிலேயே வாக்குச்சாவடியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.