பாரிஸ்

செல்வந்தர்கள் அதிகம் உள்ள நாடுகளில் புற்று நோயால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் உள்ள மக்களில் பலரின் மரணத்துக்கு இதய நோய் காரணமாக உள்ளது. குறிப்பாக நடுத்தர வயதினர் பலர் இருதய நோயால் மரணம் அடைகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் மரணமடைவோரில் 40% நடுத்தர வயதினர் இதய நோயால் மரணம் அடைந்துள்ளனர். அந்த வருடம் மட்டும் சுமார் 1.77 கோடி மக்கள் இதய நோயால் மரணம் அடைந்துள்ளனர். இது உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்காகும்.

அதே நேரத்தில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதய நோயை விடப் புற்று நோயால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவிலிருந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு  கணக்கெடுப்பின் படி பணக்கார நாடுகளில் இதய நோயால் மரணம் அடைபவர்களை விடப் புற்று நோயால் மரணம் அடைபவர்கள் 25% அதிகமாக உள்ளனர். இந்த நிலை ஏற்கனவே கடந்த  சில ஆண்டுகளாகப் பணக்கார நாடுகளில் உள்ளது.

புற்று நோய் என்பது தொற்று நோய்களில் ஒன்று ஆகும். எந்த ஒரு நோய்த் தொற்றும் பொதுவாக வசதி குறைந்தோருக்கு அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாகும். ஆனால் அவ்வாறான சூழலில் வசிப்போரை விட மிகவும் பாதுகாப்பாக வாழும் வசதி படைத்தோர் இடையே புற்று நோய் அதிக  அளவில் பரவி உள்ளது. இதற்கு உணவு, மற்றும் நோயாளிகளின் பழக்க வழக்கங்கள், மூதாதையர்கள், சமூக நிலை ஆகியவை கரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் இதய நோய்  அபாயம் பெருமளவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வீடுகளில் உள்ள காற்று மாசு, சரியான உணவு இன்மை மற்றும் போதுமான அளவு கல்வி அறிவு இல்லாதவை ஆகும். எனவே தற்போதைய நிலையில் பணக்கார நோய் எனக் கூறப்படும் இதய நோயால் சாதாரண மக்கள் அதிக அளவில் மரணமடைவதும், தொற்று நோய் என அறியப்படும் புற்று நோயால் பணக்காரர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றன.