டில்லி

திர்கட்சிகளின் மெகா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10-12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வென்றது.  காங்கிரஸ் கட்சி இரு இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.  பாஜக கூட்டணி 31 இடங்களில் வென்றது.   இதில் பாஜக மட்டும் 22 இடங்களை கைப்பற்றியது.

தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரஸ் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளது.  பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.

இந்த மெகா கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 10 -12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.   ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 20 தொகுதிகளும் மீதமுள்ள தொகுதிகளை ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, மற்றும் விகாஷ் ஷீல் இன்சான் கட்சி ஆகியவைகளுக்கு அளிக்கபட உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.