டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,29,577 ஆக உயர்ந்து 16,103  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 20,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,29,577 ஆகி உள்ளது.  நேற்று 414 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 16,103 ஆகி உள்ளது.  நேற்று 14,229 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,146 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,03,272 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 6,368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,59,133 ஆகி உள்ளது  நேற்று 167 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,273 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,430 பேர் குணமடைந்து மொத்தம் 84,245  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 2,948 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 80,188 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,558 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,210 பேர் குணமடைந்து மொத்தம் 49,301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78,335 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,737 பேர் குணமடைந்து மொத்தம் 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 613 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,771 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,790 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 379 பேர் குணமடைந்து மொத்தம் 22,417 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 606 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,549 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 649 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 632 பேர் குணமடைந்து மொத்தம் 14,215 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.