சென்னை:
மிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,33,173 ஆக உள்ளது. 13,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கோடம்பாக்கத்தில், 1,577 பேர், அண்ணா நகரில் 1,621 பேர் மற்றும் தேனாம்பேட்டையில் 995 பேர் என்றும் குறிபிடப்பட்டுள்ளது. இதே போன்று, ண்டையார்பேட்டையில் 961 பேர், ராயபுரத்தில் 907 பேர் மற்றும் அடையாறில் 1,327 பேர் என்றும் குறிபிடப்பட்டுள்ளது. திரு.வி.க. நகர், வளசரவாக்கம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் முறையே 1,032, 1,051, 1,087 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூரில் 276 பேர், மாதவரத்தில் 547 பேர், ஆலந்தூரில் 763 பேர் மற்றும் பெருங்குடியில் 591 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.