சென்னை

யணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால்  16 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் அனைத்து விமானச் சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டன.   அதன் பிறகு அந்த தடை சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டது.   முதலில் வெளிநாட்டு அத்தியாவசிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு பிறகு மிகக் குறைந்த உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டன.

சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டன.  இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியில் இருந்து நாளொன்றுக்கு 270 விமானங்கள் இயக்கப்பட்டன.  தினசரி சுமார் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  எனவே பலரும் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர்.   எனவே விமான பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  இதனால் ஒரே நாளில் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தற்போது 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.