ண்டிகர்

நேற்று அரியானா சட்டப் பேரவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

அரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   தேர்தல் அறிவிப்பு தேதியில் இருந்தே அரியானா காங்கிரஸில் தொகுதிகளைப் பெற கடும் போட்டி நிலவி வருகிறது.  அரியானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வாருக்கு பதில் குமாரி செல்ஜா தலைவராக அறிவிக்கப்பட்டார்.   இது தன்வாரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

காங்கிரஸ் தேர்தல் குழுவின் தலைவரான ஹூடா ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தல் தோல்விக்காக  தன்வாரை கடிந்துக் கொண்டுள்ளார்.   எனவே தனக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு இருக்காது எனக் கருதிய தன்வார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.    அவருக்கு எதிராக மற்றொரு கோஷ்டி போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்ல வாசலில் போராட்டம் நடத்தினார்.   அப்போது அவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பாடுபடும் காங்கிரஸ் ஊழியர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் அளிப்பதில்லை எனத் தெரிவித்தார்.   அங்குக் கூடி இருந்தோர் ஹூடாவுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

 

வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை வேட்பு மனு செய்யக் கடைசி நாள் என்பதால் நேற்றிரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.    இந்தப் பட்டியல் முக்கிய பிரமுகர்களான முதல்வர் பூபிந்தர் சிங், கிரண் சவுத்ரி, ரந்தீப் சுர்ஜிவாலா மற்றும் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகன் சந்தர் மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.