டெல்லி:

லைநகர் டில்லியில் இருந்து காஷ்மீர் செல்லும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவையை உள்துறை அமித்ஷா இன்று கொடியசைத்து  தொடங்கி வைத்தார். இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 மணி நேரம் வரை குறையும் என ரயில்வே தெரிவித்து உள்ளது.

ஏற்கெனவே டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காத்ராவையும் (katra), தலைநகர் டெல்லியையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலானது,  காஷ்மீரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோவிலையும், டெல்லியையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த விழாவில் கஉள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், இணை அமைச்சர் கள் ஹர்ஷ் வர்தன், ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பச்சை வண்ண கொடியை அசைத்து ரயிலின் சேவையை அவர்கள் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றப் பாதையில் தடைகள் இருந்ததாகவும், ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் மாறும் என்றும், அங்கு வளர்ச்சிக்கான பயணம் தொடங்கி விடடதாகவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15க்குள்ளாக, கன்னியா குமரியும் ரயில் மூலம் இணைக்கப்படும் என்றார்.

டெல்லி – காத்ரா இடையேயான, எஞ்சின் அற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையால், பயண நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணிநேரமாகக் குறையும். டெல்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில், பிற்பகல் 2 மணி அளவில் காத்ராவை அடையும்.

அங்கிருந்து 3 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில், 8 மணி நேரத்தில் டெல்லியை சென்றடையும். வர்த்தக ரீதியிலான பயணம் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆயிரத்து 630 ரூபாய் தொடங்கி 3 ஆயிரத்து 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் ரயிலினி எக்சிகியூட்டிவ் கோச்சில், 360 டிகிரி கோணத்தில் சுழலும் இருக்கை வசதி உண்டு. இறங்க வேண்டிய நிலையம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் எல்.இ.டி திரையில், ரயிலின் வேகம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அனைத்து கோச்களிலும் சிசிடிவிக்கள் உள்ளன.

தானாகவே திறந்து மூடும் கதவுகளை, ரயில் காப்பாளர் இயக்குவார். அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இதில் இல்லை. அதற்கு மாற்றாக, ஒரு பொத்தானை அழுத்தினால், ரயில் காப்பாளர் தேடி வருவார்.

ரயிலை தூய்மை செய்வதற்கு செயற்கைப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்ப டுகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் முதல் பசுமை ரயில் என்ற பெருமையையும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் பெற்றுள்ளது.