பால்தான், மேற்கு மகாராஷ்டிரா

காராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பால்தான் தொகுதியில் போட்டியிட சோட்டா ராஜன் தம்பிக்கு பாஜக கூட்டணிக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் உள்ள இந்தியக் குடியரசுக் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதில் மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பால்தான் தொகுதிக்கு அக்கட்சியின் வேட்பாளராக தீபக் நிகல்ஜே அறிவிக்கப்பட்டுள்ளார்.   இந்த தகவலை அக்கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அதவாலே நேற்று அறிவித்தார்.

வேட்பாளர் தீபக் நிகல்ஜே பிரபல தாதாவும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான சோட்டா ராஜனின் தம்பி ஆவார்.  இவர் பல வருடங்களாக இந்திய குடியரசுக் கட்சியில் இருந்து வருகிறர்.   இதற்கு முந்தைய தேர்தலில் இக்கட்சியின் சார்பில் தீபக் நிகல்ஜே செம்பூர் தொகுதியில்  போட்டியிட்டு தோல்வி கண்டார்.

 

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “இந்த தேர்தலில் தீபக் நிகல்ஜே பால்தான் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்பினார்.   அவர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.   அத்துடன் அவருக்கு இங்கு நல்ல ஆதரவு உண்டு.   அதனால் அவர் இந்த தொகுதியில் நிச்சயம் வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.