கோவை

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணி ஊழியரை சக ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது அவருடைய பெற்றோர், சகோதரர், கணவர் வீட்டார் என அனைவரும் திரண்டு வளைகாப்பு நடத்தி ஆசி வழங்குவது வழக்கமாகும்.   ஆனால் இதுவே ஒரு அரசு அலுவல்கத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவையில் துணை ஆட்சியராக பணிபுரியும் ஐ ஏ எஸ் அதிகாரி சரண்யா ராமசந்திரன் ஆவார்.   காரைக்காலைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  மேலும் 2020 வருட ஐ ஏ எஸ் அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.   இவரது அலுவலகத்தில் பல பெண்கள் பணி புரிந்து வருகிறார்கள்

இவர்களில் ஒரு பெண் ஊழியர் கர்ப்பம் அடைந்து தற்போது பிரசவ விடுப்பில் சென்றுள்ளார்.  அவரை சரண்யா உள்ளிட்ட  உடன் பணி புரியும் பெண்கள், வளையல் அணிவித்து ஆரத்தி எடுத்ஹ்டு அன்புடன் விடுப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த புகைப்படங்களை சரண்யா ராமச்சந்திரன் தனது டிவிட்டரில் பதின்ந்துள்ளார்.

அந்த பதிவில் சரண்யா ராமச்சந்திரன், “ஒரு கர்ப்பிணிப் பணியாளர் மகப்பேறு விடுப்பில் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார், இது அரசு அலுவலகத்தில் சிரித்த கண்களுடனும் சிரித்த முகத்துடனும்தலைமைத்துவத்தில் பெண்கள் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் ஆகும்! ஒரு இடத்தை 3 பெண்கள் அழகாக ஆக்கி விடுகின்றனர்” என பதிந்துள்ளார்.