தஞ்சாவூர்:

நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துமனையின் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது.


எமர்ஜென்சி வார்டு மற்றும் குழந்தை மகப்பேறு பிரிவுகளில் 8 திருநங்கைகளை நியமித்து, அதற்கான பணி ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ் கூறும்போது, மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளத்தில், ஒப்பந்த தொழிலாளர்களாக 8 திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
என்றார்.

பணியில் சேர்ந்த திருநங்கைகள் கூறும்போது, பணத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அதைவிட கவுரமும் வேலை கிடைத்ததும்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமூகத்தில் எங்களை ஏளமானமாகப் பார்த்தனர்.
மோசமாக நடத்தினர். இனி அந்த நிலை மாறும் என்றனர்.