இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் 2 கோடி குழந்தைகள் பிறக்கலாம் : யுனிசெஃப்

Must read

டில்லி

ந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கக் கூடும் என யுனிசெஃப் கணித்துள்ளது.

ஐநாவின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் சர்வதேச அளவில் குழந்தைகள் நலனுக்காகத் தொண்டுகள் ஆற்றி வருகின்ற அமைப்பாகும்.   இந்த அமைப்பு உலக மக்கள் தொகை அமைப்புடன் இணைந்து ஒரு கணிப்பை நிகழ்த்தி உள்ளது.  அத்துடன் தற்போது கொரோனா பாதிப்பு உலகெங்கும் அதிக அளவில் உள்ளதால் இந்த கணிப்பில் அதுவும் சேர்க்கப்பட்டது.

அந்த கணிப்பின் முடிவை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு யுனிசெஃப் வெளியிட்டது,  அந்த கணக்கெடுப்பின்படி கொரோனா தாக்குதல் குறித்த அறிவிப்புக்குப் பிறகு 9 மாதங்களில் மொத்தம் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கலாm என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் 2.01 கோடி குழந்தைகள் பிறக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 1.35 கோடி, நைஜீரியாவில் 64 லட்சம், பாகிஸ்தானில் 50 லட்சம் மற்றும் இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நோய்த் தொற்றுக்கு முன்பிருந்தே பல நாடுகளில் குழ்னதைகள் மரணம் அதிகமாக உள்ளதால் இந்த 9 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் மரண விகிதம் மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.    எனவே கர்ப்பம் தரித்த பெண்களும் பிறக்கும் குழந்தைகளும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மகப்பேறு பொதுவாகக் கர்ப்பம் ஆன 9 மாதங்களில் நிகழும் என்பது கணக்காகும்.  அதாவது குழந்தைகள் பிறக்கு 36 முதல் 40 வாரங்கள் ஆகும்.  தற்போது கொரோனா பாதிப்பு அதிகாரப்பூர்வமாக மார்ச் 11 அன்று கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கணிப்பு அதிலிருந்து 9 மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article