24 நாட்களில் 3 லட்சம் பேர் பங்கு கொண்ட அமர்நாத் யாத்திரை

Must read

ம்மு

டந்த 24 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சுமார் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலையில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது.   இந்த கோவிலில் சிவ லிங்க வடிவில் பனி தானாகவே அமைவது வழக்கமாகும்.  இந்த கோவிலுக்கு ஏராளாமான சிவ பக்தர்கள் வருவது வழக்கமாகும்.   இந்த மலைப்பயணம் மிகவும் ஆபத்தானதாகும்.

இந்த பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள் உடல்நிலைக்காகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மேலும் ஜம்மு நகரில் இருந்து இவர்கள் குழுக்களாக ராணுவ பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.   நேற்று அது போல் 2416 பேர் அடங்கிய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவுடன் சேர்ந்து இதுவரை இந்த வருடம் 3,01,818 பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கு கொண்டுள்ளனர்.   மொத்தம் சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரையில் இதுவரை 24 நாட்கள் முடிவடைந்துள்ளன.  கடந்த 2015 ஆம் வருடத்துக்கு பிறகு இதுவே அதிக அளவில் பக்தர்கள் வந்த வருடமாகும்.

More articles

Latest article