இஸ்லமாபாத்:

இந்தியாவில்   பொதுத் தேர்தல் நடக்கும் வரை தான் இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஸ்-இ-முகமது இயக்க முகாமை அழித்தது.
இதன்பின்னர், இரு நாடுகளிடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “இன்னும் அபாயக் கட்டம் தாண்டவில்லை. இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை பதற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தியாவிலிருந்து வரும் எந்த தாக்குலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம்” என்றார்.