சென்னை
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி வருகிறார். இந்த ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணித்துள்ளது. அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஆளுநர் ரவி தனது உரையில்
“நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
வரும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
தமிழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முழு கொள்ளளவான 152 அடியை எட்ட தேவையான அனைத்து முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளும்
தமிழக முதல்வர் வரும் 2030க்குள் தமிழக பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலரை அடைய வேண்டும் என உறுதியாக உள்ளார்.”
எனத் தெரிவித்துள்ளார்.