சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட  பல முக்கிய தலைவர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது.  அன்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 59 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.  அதன் பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவில்லை.

இன்னும் 5 நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைய உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.  இதுவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தங்கள் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.  தவிர காங்கிரஸ் 21, பாஜக 17, மநீம 111 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

பல முக்கியத் தலைவர்கள் இன்று முகூர்த்த நாள் என்பதால் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அவ்வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.  இன்று கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

கோவை மேற்கு தொகுதியில் கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர்.   இட்வரக்ளைத் தவிர அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.  வரும் 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி தினம் என்பதால் அனைத்துக் கட்சிகளும் பரபரப்புடன் காணப்படுகின்றன..