முருகப் பெருமான் பற்றி சில  முக்கியமான தகவல்கள் பகுதி 2

முருகனைப் பற்றி சில முக்கியமான தகவல்களின் இரண்டாம் பகுதி இதோ.-

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்க உத்தம திதிகள், சஷ்டி, விசாகம், கார்த்திகை. திங்கள், செவ்வாய், உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.

15. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

16. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

17. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி சாதன், சாரபேயன், குகன், பிரம்மச்சாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

18. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றிய அருணகிரிநாதர், “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று பாடியுள்ளார்.

19. அக்னி, இந்திரன், வருணன், ப்ரஹஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்னி புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்ர புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.