அனுதாபத்தில் இந்த பாடலை கேட்க வேண்டாம் : இமான்

Must read

பிறவியிலேயே பார்வையற்றவரான திருமூர்த்தி பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடல் இணையத்தில் பெரும் வைரலானது.

அதை தொடர்ந்து தற்போது ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘சீறு’ படத்தில் திருமூர்த்திக்குப் பாடும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அந்தப் படத்தில் திருமூர்த்தி பாடியுள்ள ‘செவ்வந்தியே’ பாடல் இன்று (டிசம்பர் 2) மாலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அனுதாபத்தில் இந்தப் பாடலை கேட்க வேண்டாம். உண்மையிலேயே இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், பலருக்கும் ஷேர் செய்யுங்கள். அனுதாபத்தில் அதைச் செய்யாதீர்கள். அதுதான் திருமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார் .

More articles

Latest article