images (1)

டில்லியில் உள்ள பிரபலமான அப்போலோ தனியார் மருத்துவமனையில், சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

“நிறைய பேருக்கு சட்டவிரோதமாக இங்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆதாரபூர்வமாக ஐந்து பேருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டதை கண்டறிந்திருக்கிறோம்.  இங்கு தங்களது சிறுநீகரத்தை 6000 டாலர் வரை சிலர் வெளிநாட்டிருக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
நோயாளிகளுக்கு  உறவினர்களிடமிருந்து  சிறுநீரகம் பெறப்பட்டதாக போலி ஆவணங்களை அப்போலோ மருத்துவமனை தயாரித்திருப்பதையும் கண்டறிந்துள்ளோம்” என்று டில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை மூத்த மருத்துவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், “நடக்கும் சம்பவம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.  காவல் துறைக்கு தேவையான தகவல்களை அளித்து வருகிறோம். தற்போதைக்கு வேறு ஏதும் சொல்வதற்கல்லை” என்று தெரிவித்துள்ளது.