கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம்: தமிழக மீனவர்கள் அச்சம்

Must read

download

ச்சத்தீவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை துவக்கியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசு, தற்போது அங்கு தனது கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்திய மீனவர்களை அச்சப்பட வைத்திருக்கிறது.
இலங்கைக்கு இந்தியாவால் தரப்பட்ட கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்பதுதற்போதும் விவாத பொருளாகவே உள்ளது. இந்த நிலையில்,  கச்சத்தீவின் மீதான தனது உரிமையை நிலைவாட்ட இலங்கை அரசு முனைந்திருக்கிறது.
அங்குள்ள அந்தோணியார் கோயிலை புணரமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக கூறி, தற்போது தனது கடற்படையை அங்கு நிறுத்தி இருக்கிறது இலங்கை  அரசு.
அங்கு 150க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் நிரந்தரமாகத் தங்கியிருப்பதாக  தகவல் வெளியாகி இருக்கிறது. 4 விரைவுப் படகுகள், 6 பலூன் படகுகள், 11க்கும் மேற்பட்ட நீரில் இயக்கக் கூடிய ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவைகளும் கச்சத்தீவில் முகாமிட்டுள்ள கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை தவிர 4 ரேடார் கருவிகளும் இங்கே பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக  தெரியவந்திருக்கிறது.
இது இந்திய மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More articles

Latest article