பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லையா: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

Must read

டில்லி :
ஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கோ, அந்நாட்டின்  உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கோ  எந்த வித  தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ., தலைவர் சரத் குமார் தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒன்றிற்கு தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்.ஐ.ஏ.,) தலைவர் சரத்குமார் எழுத்துபூர்வமாக அளித்த பேட்டியில். “ பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கோ அல்லது மசூத் அசாருக்கோ பாகிஸ்தான் அரசோ , அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்போ  உதவிகள் செய்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

சரத்குமார்
சரத்குமார்

அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, சரத்குமாரின் பேட்டி டிவியில் திரித்து ஒளிபரப்பப்பட்டதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.
சரத்குமார் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, காங்., மூத்த தலைவர் அகமது பட்டேல், ஆம்ஆத்மி தலைவரும் டில்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சகம்” தனது பேட்டி குறித்து  சரத்குமார் எங்களிடம் விளக்கம் அளித்துவிட்டார். அத் தாக்குதலில் பாகிஸ்தான், அரசுக்கு தொடர்புள்ளது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளது.

More articles

Latest article