ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக் ஸ்டூடியோ-வுக்கு இளையராஜா சென்றபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட ரஹ்மான் “மேஸ்ட்ரோ-வை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் குழுவுக்காக இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, “ஏ.ஆர். ரஹ்மானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன் அதனை விரைவில் நிறைவேற்றவேன்” என்று தனது ட்விட்டர் பதிவின் மூலம் பதிலளித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தற்போது துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மேஸ்ட்ரோ இளையராஜா துபாயில் உள்ள ஏ. ஆர். ரஹ்மானின் பிர்தவுஸ் ஸ்டூடியோ-வுக்கு சென்றார்.

முழுக்க முழுக்க பெண் இசை கலைஞர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பிர்தவுஸ் இசைக்குழுவில் இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.