ஈரோடு,

“.ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே.. அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு அடி வாங்கி இருப்பார்?” என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

ஈரோட்டில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசினார்.

அப்போது அவர், “அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த சொத்துக்குவிப்பு தொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வழக்கு தொடுத்து மிகப்பெரிய தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அயோக்கியத்தனம் செய்தால் தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்திருக்கிறார்.

நாட்டை குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் நிம்மதியாக இருக்க வேண்டியதுதான்.

தவறு செய்தவர்களும் மக்களை ஏமாற்றியவர்களும் கல்லறைக்கு அல்லது சிறைக்குதான் செல்ல வேண்டும்” என்று பேசிய அவர், “ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

கிராமத்தில் உள்ள மக்கள் ஜெயலலிதாவை அடித்துக் கொன்று விட்டதாக சொல்கின்றனர். ” என்று அதிரடியாக பேசினார்.