பெங்களூரு:

ர்நாடக தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அங்கு தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க பாஜகவும், காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளமும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, காங்.,- ம.ஜ.த கூட்டணியை ஆட்சி அழைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், 116 பேர் ஆதரவு தங்களுக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தேவைப்பட்டால், ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்து வோம் என்றும், கர்நாடகாவில்  ஆட்சி அமைக்க பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருகிறது.  குதிரைபேரத்தில் ஈடுபடுது பாஜகவுக்கு புதியது அல்ல, ஆனால், கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சியமகைக மோடி முயற்சிப்பது  ஜனநாயகத்தை படுகொலை செய்வதாகும், இது பாரதியஜனதாவுக்கு  புதிது அல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்,