சென்னை: காவேரி தண்ணீர் தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள் என்று தமிழக மக்களை கிண்டல் செய்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ட்விட் செய்திருக்கிறார்.

தற்போது காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை உச்சத்தை அடைந்து இருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராடி வருகின்றன.

ஆனால் மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது. இந்த நிலையில்தமிழகத்திற்கு தண்ணீரே கிடைக்காது என்பது போல பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ட்விட் செய்துள்ளார்.

”தமிழக மக்களுக்கு குடிக்கவும் பயன்படுத்தவும் தண்ணீர் வேண்டும் என்றால் கடல் நீரை சுத்தம் செய்து பயன்படுத்த நானே ஏற்பாடு செய்கிறேன். அதைவிட்டுவிட்டு உங்களுக்கு காவிரி தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள். ” என்று கிண்டலாக ட்விட் செய்திருக்கிறார்.