சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை கைது செய்தது அடக்குமுறை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:

“திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பங்கேற்போம். காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை கைது செய்துள்ளது அடக்குமுறை.

காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.