குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதிகளால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

Must read

டெல்லி: குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்குத் தொடங்க முடியாது?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். யுயுலலித்,  இவர் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறப்போகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார நாளில் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில்,  நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு  உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான வேலை நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவேலையைத் தொடங்கியது.

ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது, நீதிபதிகள் முன்கூட்டிய விசாரணைக்கு வந்தை வரவேற்று பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து பேசிய  நீதிபதி லலித், “எனது பார்வையில், நாம் காலை 9 மணிக்கு பணியில்  உட்கார வேண்டும் என கூறினார். மேலும், நமது  பிள்ளைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நாம்  ஏன் 9 மணிக்கு வரக்கூடாது என்றுகேள்வி எழுப்பியவர், வழக்கின் விசாரணையின் முடிவில் வழக்கமான நேரத்தை விட முன்னதாக அமர்வதற்காக. நீதிமன்றங்களைத் தொடங்க இந்த காலை 9.30 மணி நேரம் சரியான நேரம் என்றவர்,  நீதிமன்றங்களை முன்கூட்டியே தொடங்கி னால், அன்றைய வேலைகளை சீக்கிரம் முடிக்க முடியும் என்றும், அடுத்த நாளுக்கான வழக்குக் கோப்புகளைப் படிக்க நீதிபதிகளுக்கு மாலையில் அதிக நேரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

“நீதிமன்றங்கள் காலை 9மணிக்கு தங்கள் வேலையைத் தொடங்கி 11.30 மணிக்கு எழுந்து அரை மணி நேர இடைவெளியில் மதியம் 2 மணிக்குள் அன்றைய வேலையை முடிக்கலாம். இதைச் செய்வதன் மூலம், நீதிபதிகள் மாலையில் அதிக விஷயங்களைச் செய்ய அதிக நேரம் கிடைக்கும்” என்று நீதிபதிகள் கூறினார்.  நீண்ட விசாரணைகள் தேவைப்படாத புதிய விஷயங்கள் மற்றும் வழக்குகள் மட்டுமே இருக்கும் போது இந்த ஏற்பாடு செயல்படும் என்று லலித் கூறினார்.

இதையடுத்து  பேசிய வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி,ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.  இதற்கு நீதிபதி லலித், “இது ஒரு கேப்சூல் மட்டுமே” என்றார்.

தற்போதைய இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26அன்று ஓய்வு பெற உள்ளார், அதத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொற்பேற்றார். அவரது பதவிக்காலம்,  இந்த ஆண்டு நவம்பர் 8 வரை , சுமார் 2 மாதங்கள் மட்டுமே. இந்த நிலையில் நீதிபதி யு.யு.லிலித் நீதிமன்றத்தின் நேரத்தை மாற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article