விழுப்புரம்: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என தவாக தலைவர்  வேல்முருகன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சுங்கச்சாவடி உடைப்பு உள்பட  பல்வேறு விவகாரங்களில் சிக்கி உள்ள தவாக தலைவர் வேல்முருகன், தனது கட்சி தொண்டர்களிடையே  வன்முறை ஏற்படும் வகையில் பேசி,  அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி வருகிறார். இந்த  நிலையில், தற்போதைய  அவரது வெறித்தனமாக பேச்சு, கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இண்டி கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே உரையாற்றயி வேல்முருகன், தமிழகம் மற்றும் புதுச்சேரி  40 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றவர், சாதிய சமூக ரீதியாக ஓட்டு அரசியல் பெற உள்ள கூட்டணியை அடித்து விரட்ட இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சாதிவாரி, சமூகநீதி, என்று பேசக்கூடாது குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று கூறும் மருத்துவர் ராமதாஸ் பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு செயல்படுகிறார். இது தான் மாற்றம் முன்னேற்றமா என கேள்வி எழுப்பியவர்,  தமிழ்நாடு என்பது சமூகநீதி மண் சமத்துவ மண் இங்கு தேர்தல் அறிவித்தபின் மோடி பத்து முறை வருகிறார். புயல் பேரிடர் வரும்போதெல்லாம் அவர் எட்டிபார்க்கவில்லை என்று விமர்சித்ததுடன்,  ஒரே இந்தியா தேர்தல் ஒரே மொழி என்று பாஜகவினர் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவர்கள், இஸ்ஸாமியர்களின் ஒருங்கிணைந்த மனித குலத்தின் விரோத அரசாக பாஜக உள்ளது என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசியவர், இந்த தேர்தலில்,  இண்டி கூட்டணி வெற்றி பெற்றால், மாநிலத்தில் உள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும்  என்றவர், நவீன முறையில் கொள்ளையடிக்கிற பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும்,  ராணுவ ஆட்சியை கொண்டு வர துடிக்கிற சக்திகளுக்கும் சமூக நீதிக்காக போராடும் சக்தி களுக்கும் இடையே இந்த  போர் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.