விருதுநகர்: அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வரும் வாய்ப்பு இருப்பதாக தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தி தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவில், தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக,   தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில்,  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி, நாரணாபுரம், திருத்தங்கல், சிவகாசி தேவர் சிலை, சித்துராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் யில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட வட்டணி கட்சியினர்  வாக்கு  சேகரித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய  பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்தவர், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பையன் செங்கல் மற்றும் முட்டையை தூக்கிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நீட் தேர்வு என பரப்புரை மேற்கொள்வதாகவும்,  சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியதாகவும், டாஸ்மாக கடையை குறைப்போம் என தெரிவித்த திமுக அரசு தெருவிற்கு நான்கு டாஸ்மார்க் கடை அமைத்து வருவதாகவும். தமிழகத்தில் நிர்வாக திறனற்ற, திமுக அரசின் நடவடிக்கையால் போதை பொருள் நடமாட்டமும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன என்று கூறி இருந்தார். திருச்செங்கோடு அடுத்த வாலரைகேட் என்ற பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினாய் எடப்பாடி, திமுக ஆட்சியில் மக்கள் நலனை விடுத்து தங்கள் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கட்சியில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் நாட்டிற்கு ஒரு முதலமைச்சர் தான் தேவை திமுகவில் 4 முதலமைச்சர்கள் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் உதயநிதி துர்க்கா ஸ்டாலின்நான்கு முதலமைச்சர்கள்தமிழகத்தை அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து பேசியவர், கணவனை இழந்த ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது தாய் குலங்களுக்கு நன்றாக தெரியும்.. கேப்டனின் இழப்பை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கூட்டணி தர்மத்திற்காக என்று நாற்பது தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். நானும், எடப்பாடியாரும் 40 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதை அடுத்து 40 தொகுதிகளையும் வென்ற பிறகு எடப்பாடியார் முதல்வர் அல்ல, நாட்டின் பிரதமராகஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

பிரேமலதாவின் இந்த பேச்சை கட்ட பொதுமக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.