‘அரசு ரெடின்னா…’ ‘நாங்க ரெடி’: தமிழக தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்!

Must read

சென்னை,

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தலை நடத்த தமிழக  தேர்தல் ஆணையம்  தயாராக இருப்பதாக ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில்,   ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

இடஒதுக்கீடு சரியாக செய்யப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக  உள்ளாட்சி தேர்தலை சென்னை ஐகோர்ட்டு  ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணையின்போது தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்து உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள், மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உத்தரவிட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை மற்றும் தேர்தல்ஆணையர் ஓய்வு பெற்றது போன்ற காரணங்களால் விசாரணை நீண்டுகொண்டே போனது,

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.

ஆனால், வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும், மேலும்,  சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால், உள்ளாட்சி தேர்தலை நடத்த  தமிழக தேர்தல் ஆணையம்  தயாராக உள்ளது அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article