காலி மனைகளில் குப்பையிருந்தால் வரியுடன் சேர்த்து அபராதம்! மாநகராட்சி எச்சரிக்கை

Must read

சென்னை :

மிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், காலி மனைகளில் குப்பைகள் தேங்கி, கொசு உற்பத்தியாக காரணமாக இருந்தால், அந்த  இடத்தை சுத்தப்படுத்து வதற்கான கட்டணம் மற்றும் அபராதத்துடன் அந்த மனைக்கான வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

கொசு ஒழிப்பு பணியில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். வீடுகள், கட்டிடங்கள் தோறும் சென்று, கொசு உற்பத்தியாகிறதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆங்காங்கே உள்ள காலை மனைகளில் குப்பைகள் சேர்ந்துள்ள நிலையில், அதை அகற்ற மனை உரிமையாளர்கள் முன்வராத நிலையில், மாநகராட்சியே அங்குள்ள  குப்பையை அகற்றுகிறது. இதற்கான செலவை, காலிமனை வரியுடன் சேர்த்து அபராதத்துடடன  நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பயன்பாடற்ற காலி மனைகள் உள்ளன. இந்த மனைகளில் அக்கம் பக்கத்தினர் குப்பை கூளங்களை கொட்டுவதால் சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. அதுபோன்ற மனைகளை கண்டறிந்து, மனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்காத நிலையில், மாநகராட்சியே அங்குள்ள குப்பைகளை அகற்றி கொசு உற்பத்தியாகாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான, செலவை, காலி மனை உரிமையாளரிடம், வசூலிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து கூறிய  மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் மர்ம காய்ச்சல் பரவ, காலி மனைகளும் ஒரு காரணமாக இருப்பதால், அதை சுத்தமாக வைத்திருக்க, பலகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால்,  பல மனை  உரிமையாளர்கள் அரசுடன் ஒத்துழைக்க முன்வருவது இல்லை… இதனால், அங்குள்ள குப்பைக்கூளங்கரளை மாநகராட்சியே குப்பையை அகற்றுகிறது.

தற்போதைய நிலையில், காலி மனைகளுக்கு, சதுர அடிக்கு, 50 பைசா வீதம் காலிமனை வரி வசூலிக்கப்படுகிறது. இதை, பலர் செலுத்துவதில்லை. வீடு, நிறுவனம் கட்ட உரிமம் கேட்கும்போது, சதுர அடி கணக்கிட்டு, ஏழு ஆண்டுக்கான காலிமனை வரி வசூலிக்கப்படும். இந்த வரியுடன், காலி மனைகளில் குப்பை அகற்றிய செலவை சேர்த்து அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article