சென்னை: மத்தியஅரசு செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் கலந்துகொள்ளாத நிலையில்,.  தமிழகத்தின் சார்பாக நிதி செயலாளரும் வணிக வரி ஆணையாளரும் கலந்துகொண்டனர். கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியஅமைச்சரின் உரை  சமர்பிக்கப்பட்டது. இதில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இது கடுமைனா விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தொகுதியில் முன் கடமைகள்  இருந்த்ததால் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்று விளக்க மளித்தவர், ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டத்தில் முக்கியமான எதுவும் விவாதிக்கப் படாது என்று கூறியதுடன், செப்டம்பர் 10 -க்கு பிறகு தான் இந்த கூட்டத்திற்கான அழைப்பை தான் பெற்றதாகவும், அதற்கு முன்னதாகவே, மதுரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உறுதியளித்துதிருந்தேன்.  15 முதல் 20 நிகழ்வுகளை என்னால் ரத்து செய்ய முடியவில்லை என்பதால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

மேலும், தான்  ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து முதல்வரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக  கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட கூடுதல் பொருளில், ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஐந்து அல்லது ஆறு முக்கியமான பொருட்கள் இருந்த்தாகவும், இது தொடர்பாக 500 ஒற்றைப்படை பக்கங்களை படித்து தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஒவ்வொரு பொருளுக்கும் விரிவாக பதிலளித்தேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  இந்தியா போன்ற நாட்டில்தான் மத்திய அரசு அதிகாரத்திற்குள் நேரடி வரி விதிப்பு முழுக்க முழுக்க இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட அளவு, மறைமுக வரி, மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி போன்றவை, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், நகர நிர்வாகங்களுக்கு கூட அதிக அதிகாரம் உள்ளது.

இப்போது, மாநில அரசின் கையில் இருக்கும் வரி விதிப்பு சார்ந்த இரண்டு பெரிய அதிகாரங்கள், மது விற்பனைக்கு விதிக்கப்படும் வரி மற்றும் பெட்ரோல், டீசல் பொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் மட்டும்தான். இதனால் இயற்கையாகவே மாநிலங்கள் தங்களிடம் இருக்கும், இந்த வரி சார்ந்த எஞ்சியுள்ள அதிகாரங்களையும் விட்டுக் கொடுக்க ரெடியாக இல்லை. ஏனென்றால் இதிலும் ஒரு பெரும் பாகம், டெல்லி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரு சிலர் ஜிஎஸ்டி எல்லோருக்குமான அமைப்பு என்கிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கானது என்பதுதான் உண்மை. கடந்த 7 வருடங்களில் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு, ஐந்திலிருந்து, 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கு பகிரப்படும், கலால் வரி விகிதம் மற்றும் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளக் கூடிய செஸ் மற்றும் கூடுதல் கட்டணமாக 90 சதவீதம் கலால் வரியிலிருந்து, 4 சதவீதம் கலால் வரியாக மாறி இருக்கிறது. மத்திய அரசின் 96 சதவீதம் வரி விதிப்பு, கூடுதல் கட்டணமாக உள்ளது.

எனவே, நான் ஏற்கனவே கூறியதைப் போல, மத்திய அரசு, செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை அகற்றினால், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்வோம்.  ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு செல்லப்பட்டால், இந்த விஷயத்தில் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்தில் இருந்து மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது. மாநில வரி வருவாயை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?  தமிழகத்தின் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும்போது திமுகவின் நிலைப்பாடும் மாறும் என நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

செஸ் வரியை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ள தமிழக நிதியமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா?  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செஸ் வரி என்பது என்ன? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நமது நாட்டில் நேரடி வரி, மறைமுக வரி என்று வகைப்படுத்தப்படுகிறது. தனி நபரின் வருமானத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவது வரியாகும். அந்த வரி தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதத்தில் விதிக்கப்படுவதே ‘செஸ்’ வரி. அதாவது ‘செஸ்’ என்பதை மேல் வரி அல்லது கூடுதல் வரி.

ஆனால், நாடு முழுவதும்  2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.   ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு, வருமான வரி மற்றும் மாநகராட்சி வரி போன்ற முதன்மை வரிகளே உள்ளன.

தனி நபரிடமிருந்து வரி, ‘செஸ்’ என்ற இரு வேறு வழிகளில் வசூலிக்கப்படும் தொகை, கருவூலத்தில் அவற்றுக்கான பிரத்தியேக நிதியில் சேர்க்கப்படுகிறது.

அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும் வருமானம், இந்திய அரசியலமைப்பின் 266 (1) பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ள நிதியில் சேர்க்கப்படுகிறது. அங்கிருந்து அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்படும்படி வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு (2021-22)ம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,  பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50-யும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.4-யும் செஸ் வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நுகா்வோா்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி ஆகியவற்றை மத்திய அரசு குறைத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் செஸ் வரியும், மதுபானங்கள் மீது 100 சதவீதமும், பாமாயில் மீது 17.5 சதவீதமும், ஆப்பிள் மீது 35 சதவீதமும், நிலக்கரி மீது 1.5 சதவீதமும், உரங்கள் மீது 5 சதவீதமும், பருத்தி மீது 5 சதவீதமும் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக நிதியமைச்சர் கூறியதுபோல, வெறும் செஸ் வரியை மட்டும் மத்திரஅரசு நீக்கினா, பெட்ரோல், டீசல் விலையில் எந்தஅளவுக்கு மாற்றம் ஏற்படும் என்பது தெரியவில்லை.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை! நிர்மலா சீதாராமன்