டில்லி

த்திய அரசு ஒமிக்ரான் பரவலில் அலட்சியம் காட்டக் கூடாது என ஐ சி எம் ஆர் முன்னாள் இயக்குநர் மருத்துவர் மோகன் குப்தே எச்சரித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் உலகெங்கும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.   பல உலக நாடுகளில் இது வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவிலும் இந்த பரவல் அதிகமாகக் காணப்படுகிறது.   தமிழகத்தில் நேற்று ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஐ சி எம் ஆர் முன்னாள் நிறுவன இயக்குநர் மருத்துவர் மோகன் குப்தே, “மத்திய அரசு ஒமிக்ரான் பரவலில் அலட்சியம் காட்டக் கூடாது.   அதிக அளவில் ஒமிக்ரான் பரவினால் அதைச் சமாளிக்கும் அளவுக்கு மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும்.   ஒமிக்ரான் பரவல் தென் ஆப்ரிக்காவில் அதிகமாக இருந்தாலும் ஆரம்பத்தில் அதன் பாதிப்பு குறைவாகவே இருந்தது.

தற்போதைக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டால் அது குறித்து அச்சமடைய தேவை இல்லை.   இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவலால் பாதிப்பு அடையும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும்.   குறிப்பாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் அளவுக்குப் பாதிப்பு இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.