சென்னை

மிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.   பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.   இந்தியாவிலும் இந்த பாதிப்பு உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து வருவோர் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.    தற்போது தமிழகத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.,

நைஜீரியாவில் இருந்து தோகா வழியாகச் சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று  உறுதி ஆகி உள்ளது.   இதனால் தமிழகத்தில் ஒமிக்ரான் நுழநதது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம், “நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. அவரது குடும்பத்தினர் 6 பேர் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு எஸ் வகை வைரஸ் உள்ளது உறுதி ஆகி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.