டில்லி

ந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ சி எம் ஆர் அறிவித்துள்ளது.

இந்திய நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 1,13,043 நபர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதில் 33,537 பேர் நகர்ப்புறத்தில் இருந்தும், 79,506 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாகக் கோவா மாநிலத்தில் 26.4 சதவீதமும் குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.8 சதவீதமும் நோய் பரவல் உள்ளது. ஆய்வின் மூலம் இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்ப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் இருப்பது  ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீத பேரும், குறைந்த பட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீத பேரும் நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. இங்கு நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. மேலும் தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு முந்தைய நிலையில் நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. இது நகர்ப்புறங்களில் 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.