டில்லி:

பிநந்தன் காபி குடிப்பது போன்ற விளம்பரத்தை பாகிஸ்தான் டிவி சேனல் வெளியிட்டு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் டிவி விளம்பரம் இந்தியர்களை கோபமூட்டி வருகிறது.

உலக  கிரிக்கெட் அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி என்றாலே இந்திய ரசிகர்கள் அதகளமாகவும், ஆக்ரோஷமாகவும்  களத்தில் காணப்படுவர். இந்த நிலையில், வரும் 16ந்தேதி  அன்று இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஜாஸ் டிவி வெளியிட்ட விளம்பரம் இந்திய ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 33 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த விளம்பர படத்தில்,  சமீபத்தில் பாலகோட் தாக்குதலின்போது,  பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல வேடம் அணிந்த ஒருவரிடம் கேள்விகள் கேட்கின்றனர்.

பாக்கிஸ்தானின் ஜாஸ் டி.வி. வெளியிட்ட 33-வது வீடியோவில், இந்திய ஏர் ஃபோர்ஸ் பைலட்  அபிநந்தன் மீசையுடன், ராணுவ உடைக்கு பதிலாக, பாத்திரம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அணிந்து ஒருவர் காணப்படுகிறார்.

போட்டியின்போது, டாஸில் வென்றால், ஆட்டத்தை தேர்ந்தெடுப்பது பற்றிய கேள்விக்கு  “நான் வருந்துகிறேன், நான் இதை உன்னிடம் சொல்ல விரும்பவில்லை” என மீண்டும் மீண்டும் சொல்கிறார். உங்கள் அணியின்  11 பேர் கொண்ட வீரர்கள் பெயர்கள் என்ன? என கேட்கின்றனர். இதற்கு அந்த நபர்,  சாரி ஜென்டில்மேன், இதை உங்களிடம் சொல்ல முடியாது என அபிநந்தன் போல வேடமிட்டவர் கூறுகிறார்.

இது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன், அவர்களின் விசாரணையின்போது, வேறு ஏதும் சொல்ல மறுத்தை சித்தரித்து கேலி செய்வது போன்று இந்த விளம்பரம் அமைக்கப்பட் டுள்ளது. பின்னர் அவர் கிளம்பும்போது, அவரிடம் இருந்து  டீ கப்பை பறித்துக் கொள்கின்றனர். அப்போது, உலக கோப்பையை நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்ற வாசகத்துடன் முடிகிறது. இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் டிவி நிர்வாகத்தின் அடாவடி விளம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த  உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், வரும் 16ந்தேதி நடைபெற உள்ள போட்டியிலும் பாகிஸ்தானின் மூக்கை இந்திய உடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.