அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்! கவர்னர் முதல் பேச்சு

சென்னை:

ரசியல் சார்பின்றி இருப்பேன், அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டு செயல்படுவேன் என்று இன்று தமிழக கவர்னராக பதவி ஏற்ற பன்வாரிலால் தெரிவித்தார்.

இன்று பதவியேற்றதும், செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர்,  தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்தே எனது ஆதரவு அரசுக்கு இருக்கும் என்றார்.

மேலும், தன் அரசியல் சார்பின்றி, அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டு செயல்படுவேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்றார்.

தமிழக அரசின்  செயல்பாட்டை பொறுத்து எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
i work Subject to constitutional law! Governor's first speech at Guindy Rajbhavan