டெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்  சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர்.

தான் பெண்கள்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது,  ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.  இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறைகளை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சதாஃப் ஜாபர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரி ஆகியோர் கடந்த டிசம்பர் 19ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு சமீபத்தில் லக்னோ நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அவர்கள் சிறையில் இருந்து வெளியாகி உள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சதாஃப் ஜாபர், தான் சிறையில் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று கூறினார்.

தன்னை  பாகிஸ்தானி என்று சிறைக்காவலர்கள் கூறியதாகவும், சிறைக்குள் ஆண் காவல்துறையினரால்  கொடூரமாக தாக்கப்பட்டேனன், அவர்கள்  சூ கால்கலால் என்னை உதைத்தனர் என்று குறிப்பிட்டவர், இதுபோன்று அங்குள்ள  பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமை நடைபெற்றது.  இதில் கொடுமை என்னவென்றால், தாங்கள் அடைக்கப்பட்டது மகளிர் சிறை…. ஆனால், அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம்தான் நிறைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு மாநிலத்தின் முதல்வர் போல் பேசவில்லை. பழி வாங்கும் நோக்கிலேயே நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.