டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்த தமிழ்நாடு வீரர், பிரக்ஞானந்தாவுகு வாழ்த்து தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக  அளிப்பதாக அறிவித்து உள்ளார்.

அஜர்பைஜன் தலைநர்க் பாகுவில் ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி  கடந்த வாரம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியயாவை அவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ‘இளம் புயல்’ பிரக்ஞானந்தாவும், உலகின்  ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான  நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் (மோதினர்.  சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைப்புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து,  வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று  நடத்தப்பட்டது.  இந்த ஆட்டத்தின்  41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது.  இருந்தாலும், பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி 2வது இடத்தை பிடித்தார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்து. இதன் காரணமாக பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  பிரபல மஹிந்திரா & மஹிந்திரா  கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான,  நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு ஒரு மின்சார காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். முன்னதாக, பிரக்ஞானந்தாவுக்கு ‘தார்’ காரை பரிசளிக்க வேண்டும் என்று டிவிட்டரில் பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ‘ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது. தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். மின் வாகனங்களைப் போலவே அவர்களின் பிள்ளைகளும் நம் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு. எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி – ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) என்ற மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்’ என்று  குறிப்பிட்டு ‘என்ன சொல்கிறீர்கள்?’ என தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷை டேக் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ராஜேஷ், ‘யோசனை வழங்கியமைக்கு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி. எங்களது நிறுவனத்தின் மின் வாகனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. விரைவில் ஒரு படைப்பின் மூலமாக எங்கள் குழு அவர்களை அணுகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.