சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க தமிழ்நாடு பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆட்சியாளர் களால் பராமரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில்,  ரூ.30கோடி செலவில் வள்ளுவர்கோட்டம் சீரமைக்கப்படும் என கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் சாமிநாதன், ஆய்வின்போது அறிவித்திருந்தார்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக  சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம்  திகழ்கிறது. இது  வள்ளுவர் கோட்டம் என்பது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையிலும், திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில்  கட்டப்பட்டது. அதனுள் 133 அத்தியாயங்கள் 1330 குறள்களும் வடிக்கப்பட்டுள்ளது. மேலும்,  அதனுள், 4,000 க்கும் அதிகமான மக்கள் அமரக்கூடிய ஆடிட்டோரியம் ஒன்றும் அமைந்துள்ளது.  கோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் சிங்கம் மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த வரலாற்று சின்னம்  திமுக ஆட்சியின்போது, 1975 முதல் 1976க்கு இடையே கட்டி முடிக்கப்பட்டது. இது கட்டப்பட்டு  47 ஆண்டுகள்  கடந்தும் இன்று கம்பீரமான  கலை நயம் மிக்க சிற்பங்களோடு  காட்சி அளிக்கிறது.

இந்த கலைநயம் மிக்க கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சியின்போது முறையான பராமரிப்பு இன்றி போடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க முடிவு செய்தது. அதன்படி, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் சாமிநாதன் உள்பட அதிகாரிகள் வள்ளுவர்கோட்டை ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வள்ளுவர் கோட்டத்தை ரூ.30 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை சார்பில் இதற்காக பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து, தற்போது அதற்கான டெண்டரை பொதுப்பணித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கல்தேர் உள்ள வளாகம் மினி ஆம்பிதியேட்டர், அருங்காட்சியகம், இசை நீரூற்று, தோட்டங்கள் மற்றும் இயற்கையை ரசித்தல் ஆகியவற்றுடன் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. மேலும், திருவள்ளுவர் குறித்த லேசர் ஒளி மற்றும் ஒலிக் காட்சியும் வல்லுார் கோட்டத்தில் அமைக்கப்பட உள்ளருது. 

#1ShotNews | #சென்னை | #வள்ளுவர்கோட்டம் | #சுற்றுலா | #கோடம்பாக்கம் | #தமிழ்நாடு | #தமிழ்நாடு செய்திகள்