சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் உதயநிதிக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜக-வினரை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

தவிர, சனாதன தர்மம் என்பது இந்து தர்மத்தை குறிப்பது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருப்பது இந்துக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்ய தூண்டும் வகையில் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், வர்ணாஸ்ரம சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் சனாதனம் தான் இந்துமதத்தின் அடிப்படை கோட்பாடு என்று வலியுறுத்தி வரும் மத ரீதியிலான செயல்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பொது சிவில் சட்டம் குறித்தும் மறுபக்கம் சனாதனத்தை வலியுறுத்துவதும் வேடிக்கையாக இருப்பதாக பதிலடி கொடுக்கப்பட்ட வருகிறது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரான வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தும் சனாதன கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அதேவேளையில், இனப்படுகொலையை தூண்டும் விதமாக பேசியதாக கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. திராவிடத்தை, கம்யூனிசத்தை ஒழிப்பது குறித்தும் காங்கிரஸ் முக்த் பாரத் என்பதும் எப்படி இனவாதத்திற்கு எதிரானது இல்லை என்று பாஜக-வினர் கூறுகிறார்களோ அதுபோல சனாதன ஒழிப்பு என்பது சித்தாந்த ரீதியிலானது” என்று கூறியுள்ளார்.

சனாதன ஒழிப்பு : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு…