தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாருக்கு கொரோனா!

Must read

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதி செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 3.06 லட்சம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நாடு முழுவதும், ற்போது 22லட்சத்து 49ஆயிரத்து 335 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  81 வயதான முன்னாள் மத்திய அமைச்சரும்,  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், தனக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், கவலைப்பட எந்த காரணமும் இல்லை. எனது மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை நான் பின்பற்றுகிறேன்”.

“கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

More articles

Latest article