டில்லி:

னக்கு எதிர்க்கட்சியிலும் பல நண்பர்கள் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது நண்பர் என்று கூறியவர், அவர் தனக்கு ஆண்டுதோறும் குர்தா பரிசளிப்பார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில், அரசி யல் வாடை இன்றி உரையாடல் நடத்தினார்.  அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில்  இந்த பேட்டி அமைந்திருந்தது. அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் அக்ஷய்குமார் குறிப்பிட்டிருந்தார்.

உரையாடலில்,  தான் நாட்டின் பிரதமராவேன்  என்று ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது என்று தெரிவித்த மோடி,  எதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவு படுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தனது சிறந்த நண்பர் என்று நினைவு கூர்ந்த மோடி,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது நண்பரே என்று தெளிவுபடுத்தினார். மம்தா பானர்ஜி தனக்கு ஆண்டுதோறும் குர்தாக்களை அனுப்புவார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.  அதுபோல, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இனிப்புகளை அனுப்புவது உண்டு.

என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கவே இன்னும் விரும்புகிறேன் என்றவர், கணக்கு நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தேனா வங்கி அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்து சேமிப்புக்கான கணக்கை தொடங்கி கொடுத்தனர்.

ஆனால் என்னிடம் போதுமான பணம் இருந்ததே இல்லை. பின்னர் என்னை பள்ளியில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் கணக்கை செயல்படாமல் வைத்திருந்ததால் அந்த கணக்கை குளோஸ் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். பின்னர் 30-32 வயதில் நான் முதல்வரானதும் எனக்கு அவர்களது வங்கியில் சிறு வயது முதலே கணக்கிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் எனது முதல்வருக்கான ஊதியம் அந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. குஜராத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் நான் தான். இந்த பெருமையை எந்த பிரதமரும் பெற்றதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.