நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அந்த ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்றும் நடிகர் ஆர்யா விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான இந்த ஓட்டல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவருக்கு கைமாறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை அண்ணாநகர், தரமணி மற்றும் கேரளாவில் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அதில் நடிகர் ஆர்யா-வின் பெயர் அடிபட்டது.

இதுகுறித்து நடிகர் ஆர்யா விளக்கமளித்துள்ள நிலையில் ஐடி ரெய்டு நடந்து வரும் ஹோட்டல் கேரள மாநிலம் தலசேரியை சேர்ந்த குன்ஹி மூசா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

சென்னை தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டிலும் அவர் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.