சென்னை:  வரி மோசடி புகாரின் பேரில், பிரபல நடிகரான நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமாக  சென்னையில்  உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், கேரளா, தலசேரியைச் சேர்ந்த குன்ஹி மூசாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவருக்கு சொந்தமான ஹோட்டல் சென்னையின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.  Sea shell  என்ற பெயரில்  நடத்தப்படும் இந்த ஒட்டல் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகம் தரப்பில் முறையான வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில்,இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்  சென்னையில் உள்ள Sea shell   உணவகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.