தராபாத்

சையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானைப் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவு படுத்திப் பேசியது  பரபரப்பாகி உள்ளது.

முன்னாள் ஆந்திர முதல்வரும் பிரபல நடிகருமான என் டி ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார்.   இவர் சமீபத்தில் ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்துக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அந்த காணொளி வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

அந்த பேட்டியில் பாலகிருஷ்ணா தமக்கு ஏ ஆர் ரகுமான் யார் என்றே தெரியாது எனக் கூறி உள்ளார். 

”ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கலாம்.  ஆனால் அவர் எனக்கு யார் என்றே தெரியாது.  உயரிய விருதான பாரத ரத்னா போன்ற விருதுகள் என் டி ராமராவின் கால் விரலுக்குச் சமம்.  என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகத்துக்குச் செய்த நன்மைக்கு எந்த ஒரு உயரிய விருதும் ஈடாகாது. ” என பாலகிருஷ்ணா அந்த காணொளியில் கூறி உள்ளார். 

அவர் கருத்துக்கு இணைய தளங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  தனது படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க மறுத்ததால் இவ்வாறு பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.