ர்ணாகுளம்

கேரள சட்ட சபை முதல் திருநங்கை வேட்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆர்வலர் மற்றும் முதல் வானொலி வர்ணனையாளரான அனன்யா குமாரி அலெக்ஸ் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி என்னும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார்.   இவர் பிரபல மேக் அப் கலைஞர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

சமீபத்தில் இவர் கேரள சட்டசபைத் தேர்தலில் சமூக நீதிக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.  சுமார் 28 வயதாகும் அனன்யா நேற்று இரவு தனது இல்லத்தில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.  இது தற்கொலை எனச் சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனன்யா பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடும் வலியால் அவதிப்பட்டதாக அவரது திருநங்கை தோழிகள் தெரிவித்துள்ளனர்.   கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து விசாரணை நடத்த மருத்துவ இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.  பாலின மாற்று அறுவை சிகிச்சையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.