வருத்தம் தெரிவிக்க முடியாது: மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்: ராஜேந்திர பாலாஜி

Must read

சென்னை:

ந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்று முரண்டு பிடித்துள்ளார்.

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறினார். இது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசயி ராஜேந்திர பாலாஜி, இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல்ஹாசன்  என்றவர், அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே? என்று கூறினார்.  தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்று மறுத்தவர், எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்.

கமலை கண்டித்தால் நான் உறுதிமொழியை மீறியதாக அர்த்தமா?  ஐ எஸ்  அமைப்பினரிடம் பணம் வாங்கிவிட்டாரா கமலஹாசன்  என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன் என்று கூறியவர்,  தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார் என்று மேலும் சாடியவர்,  பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் மக்கள் நீதி மய்யத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது, செய்தியாளர், அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு,  கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்; அவர் இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

More articles

Latest article